பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும்
தரப்பு எம்பிக்களுக்கு தற்போதுள்ள சட்ட கட்டமைப்புக்கு புறம்பாக அரசாங்க வாகனங்களை வழங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதைய சட்டக் கட்டமைப்பில் அரச வாகனங்களை வழங்குவதற்கான முறைமை இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன உரிமம் வழங்குவது நடைமுறையில் உள்ள சட்ட முறை என்றும், அதுமட்டுமின்றி, எம்.பி.க்களுக்கு கூடுதல் வாகனங்களை வழங்குவதன் மூலம் கூடுதல் செலவுகளை அரசுக்கு உருவாக்குவதுடன் இதனை மீறி சட்டவிரோதமாக செயற்பட்டால் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும் அமையுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.