Our Feeds


Thursday, November 21, 2024

SHAHNI RAMEES

தேசியப் பட்டியல் உறுப்பினராக எனது நியமனம் சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

 


புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல்

உறுப்பினராக தனது நியமனம் சட்டபூர்வமானது என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.


புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் இன்று (21) கலந்துகொண்டார்.



பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,



தேசியப் பட்டியல் உறுப்பினராக தான் தெரிவுசெய்யப்பட்டமை ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை. முழு கட்சிக்கும் பிரச்சினை இல்லை.



ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்துவதில் தனது கவனத்தை செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், ஒரு சிலரின் நலனுக்காக கட்சி பாதிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »