தன்னை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு
நியமிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.தேசியப் பட்டியல் விடயம் குறித்த கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 40,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றேன்.
எனவே என்னை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்க வேண்டும். நான் ஏற்கனவே கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளேன், அவர் எனது கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன்.
என்னை பாராளுமன்றத்துக்கு நியமிக்காவிட்டால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” எனத் தெரிவித்தார்.