இன்று முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை வீடுகள், பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 9ஆம் திகதி தட்டம்மை தடுப்பூசி திட்டம் அமுல்படுத்தப்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், தொற்றுநோய்க்கான அவசர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் இந்த பிரிவில், தட்டம்மை உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்து மக்கள் விசாரிக்க முடியும்.
0117446513, 0117682722, 011768 28 72 அல்லது 0117682662 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.