அநுராதபுரம் கடதொளஹா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று (11) அநுராதபுரம் கடதொளஹா பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது குறித்த சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
42 வயதுடைய அநுராதபுரம் நீதிமன்றத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.