Our Feeds


Saturday, November 23, 2024

Zameera

உயர்தரப் தரப் பரீட்சையின் போது கடமையாற்றவுள்ள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை




 நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டபத்திற்குள் பணியில் ஈடுபடும் ஊழியர்கள்  கையடக்க தொலைபேசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாளை மறுதினம் பரீட்சை

நாளை மறுதினம்(25ஆம் திகதி) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்தநிலையில்,  உயர்தரப் பரீட்சையின் போது  பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே, பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உதவி அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கையடக்க தொலைபேசிகளை பரீட்சை மண்டபத்திற்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »