பொதுத் தேர்தலுக்கான 600,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது..
தபால் நிலையங்களில் எஞ்சியிருக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வெளிநாட்டில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வசிப்பிடத்தை மாற்றிவிட்டு வேறு இடங்களில் இருப்பவர்களுடையதென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அறிவிப்புகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (11) முதல் 14 ஆம் திகதி வரை தபால் நிலையத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.