முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த நான்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர்களான சனத் நிஷாந்த, மொஹான் டி சில்வா, ஆர்.சம்பந்தன், மற்றும் அஜித் ராஜபக்ஷ ஆகியோரின் இல்லங்களே இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
மொஹான் டி சில்வாவின் உத்தியோகபூர்வ இல்லம் இன்று கையளிக்கப்பட உள்ளதுடன் முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லம், அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி நாளைய தினம் கையளிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது
மேலும், ஆர்.சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக ஒப்படைக்குமாறு அமைச்சு அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக, சொத்து ஆவணங்களில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால்தான் இல்லம் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்றும் அமைச்சு விளக்கமளித்துள்ளது.