தெற்கு சீன ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு நிலையமொன்று அருகில் நபரொருவர் தனது காரை மக்கள் மீது மோதியதில் 35 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து நேற்று (11) மாலை இடம்பெற்றதுடன், காரை வேகமாக செலுத்திச் சென்ற நபரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், காரை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் 62 வயதான நபரை கைது செய்ய முற்பட்ட போது கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார்.
சந்தேக நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஜுஹாய் பொலிசார் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.