கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப் பணிகளை 2025 ஜூன் 30 க்குள் முடிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை அவதானித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
முனையத்தில் உபகரணங்களை நிர்மாணிப்பதற்கும் இறக்குமதி செய்வதற்கும் $750 மில்லியனில் கிட்டத்தட்ட 20% வரி குறைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட முனையத்திற்கு 12 எஸ்.டி.எஸ் கிரேன்கள் (ஷிப் டு ஷூ கிரேன்) மற்றும் 40 தானியங்கி டெர்மினல் கிரேன்கள் ஒர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 எஸ்.டி.எஸ் கிரேன்கள் மற்றும் 20 டெர்மினல் கிரேன்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறுகிறது.