Our Feeds


Wednesday, November 27, 2024

SHAHNI RAMEES

சவூதியில் நடைபெற்ற சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாடு 2024



சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாடு 2024

 பொருளடக்கம்:


1. முகவுரை  

2. மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்  

3. பரிந்துரைகளின் விரிவான விளக்கம்  

4. மன்னர் சல்மான் மனிதாபிமான மையத்தின் பங்கு  

5. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வழிகள்  

6. சவால்கள் மற்றும் தீர்வுகள்  

7. முடிவுரை  


1. முகவுரை


2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 மற்றும் 25 திகதிகளில், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச இணைந்த இரட்டையர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு, உலகின் முன்னணி மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் இணைந்த இரட்டையர்களின் குடும்பங்களை ஒரே மேடையில் கொண்டு வந்தது. 


மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய நாடுகள்:


இம்மாநாட்டில் முக்கியமான பல அரபு நாடுகள் பங்கேற்றன, அவையாவன: 


- சவூதி அரேபியா  

- பஹ்ரைன்  

- மொராக்கோ  

- கத்தார்  

- யெமன்  


முக்கிய பேச்சாளர்கள்:

நிகழ்வின் முக்கிய வளவாளர்களாக இத்துறை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வாளர்கள் பங்கு பெற்றனர், அவர்களுள் சிலர் ஆய்வுகளை முன் வைத்தனர், அவர்கள் பற்றிய தகவல்கள் பின் வருமாறு:

- டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ் (சவூதி அரேபியாவின் பிரபல குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்)  

- பஹ்ரைன் மற்றும் மொராக்கோ மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள்  

- உலக சுகாதார அமைப்பு (WHO) பிரதிநிதிகள்  


மாநாட்டின் முக்கியத்துவம்:


இம்மாநாடு, இணைந்த இரட்டையர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் இந்நிலைமைக்கு சிசுக்கள் வருவதை தடுக்கும் முறைகளில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தல் போன்ற முக்கிய விடயங்களுக்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக அமையும்.



2. மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்


1. உலகளாவிய ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தல்  

இணைந்து பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் தொடர்புபட்ட  சிகிச்சை மற்றும் பராமரிப்பில் புது தொழில்நுட்பங்களை ஆராய்ச்சிகளை மேம்படுத்தல்.  


2. தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தல்  

   கல்வி, மருத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளை ஊக்குவித்தல்.  


3. *உலகளாவிய நிதி அமைப்புகளை ஏற்படுத்தல்*

  

 இவ்விடயத்தில் ஏற்படுகின்ற நிதி பற்றாக்குறையை நீக்க உலகளாவிய அளவில் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க திட்டமிடல்.  


3. பரிந்துரைகளின் விரிவான விளக்கம்


3.1. தொடர் மாநாடுகள்

- சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்ய, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகளை நடத்தல்.  

- ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் சிகிச்சை வளர்ச்சியை பகிர்ந்து கொள்ள புதிய வாய்ப்புகளை உருவாக்கல்.  


3.2. ஆராய்ச்சிகளை மேம்படுத்தல்

- ஜீனோமிக் ஆய்வுகள் மூலம், இணைந்த இரட்டையர்களை கண்டறியும் புதிய வழிகளை அடையாளம் காணல்.  

- அறுவை சிகிச்சை நுட்பங்களில் புதிய முறைகளை பரிசோதனை செய்ய உலகளாவிய ஆராய்ச்சியை ஒருங்கிணைத்தல்.  


3.3. உலகளாவிய தகவல் மையம்

- மருத்துவ நிபுணர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் இணையதளங்களை அமைத்தல்.  

- அதில் மருத்துவ வழிகாட்டிகள், சிகிச்சை மையங்கள், பரிந்துரைகள் மற்றும் வெற்றிகரமான வழக்குகள் குறித்த தகவல்கள் அடங்குதல் வேண்டும்.  


3.4. நிதி பொறிமுறை


- மன்னர் சல்மான் மையத்தினூடாக விசேட நிதி அமைப்பை உருவாக்கி, வறிய குடும்பங்களுக்கு சிகிச்சை வழங்கல்.  


3.5. விழிப்புணர்வு மற்றும் தடுப்பு

- மக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒட்டிப் பிறக்கும் நிலைமையை உருவாக்கக்கூடிய காரணிகளை குறைத்தல்.  

- பாடசாலை, கல்லூரி மற்றும் சமூக நிலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.  


3.6. உரிமைகள் பாதுகாப்பு

- இணைந்த இரட்டையர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை உருவாக்கல்.  

- விஞ்ஞானிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளல்.  


3.7. "உலக இணைந்த இரட்டையர் தினம்"

- நவம்பர் 24 கை உலக இணைந்த இரட்டையர்கள் தினமாக அறிவித்து விழிப்புணர்வு நிகழ்வுகளை உலகளாவிய அளவில் மேற்கொள்ளல்.  


4. மன்னர் சல்மான் மனிதாபிமான மையத்தின் பங்கு


முன்னணி சாதனைகள்:

- 139 இணைந்த இரட்டையர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன, இதில் 61 ஜோடி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.  

- இந்த சிகிச்சைகள் சவூதி அரேபியாவின் மருத்துவ சேவைகளில் புதிய மைல்கற்களாக அமைந்துள்ளன.  


தொழில்நுட்ப முன்னேற்றங்கள்:

- 1990 முதல், (KSrelief) மன்னர் சல்மான் மையம், உலகளாவிய நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து அறுவை சிகிச்சைகள் நடத்தி வருகிறது.  

- இந்த மையத்தின் வழியாக ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் சிகிச்சைகளுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  


டாக்டர் அப்துல்லாஹ் அல்-ரபீஆ தலைமையிலுள்ள மருத்துவக் குழு:

- மருத்துவ முறைகளில் தொடர்ச்சியான மேம்பாட்டுடன் உலகளாவிய அறிவியல் மையங்களில் பிரதான பங்களிப்புகளை வழங்கி வருகின்றது.  


அதிசிறந்த பங்களிப்புகள்:

- சவூதி அரேபியாவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு புதிய கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  

- வறுமை நிறைந்த நாடுகளில் சிகிச்சைகள் அளித்து உலகளாவிய புகழ்பெற்ற மருத்துவ மையமாக வளர்ந்துள்ளது.  


5. பரிந்துரைகளை நடைமுறையில் செயல்படுத்தும் வழிகள்


1. அரச ஆதரவு:  

   - சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, ஜீனோமிக் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அரச ஆதரவை உறுதி செய்தல்.  


2. தொண்டு நிறுவனங்கள்:  

   - தனிநபர் மற்றும் நிறுவன நன்கொடைகளை ஒருங்கிணைத்து நிதி திரட்டல்.  


3. சமூக விழிப்புணர்வு:  

   - மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிந்தனையாளர் மாநாடுகள், கல்வி நிகழ்ச்சிகள் நடத்தல்.  


6. சவால்கள் மற்றும் தீர்வுகள்


சவால் 01:  

சர்வதேச ஒத்துழைப்பின்மை.  

தீர்வு:  

UN, WHO போன்ற அமைப்புகளின் ஆதரவை பெறல்.  


சவால் 02:  

நிதி ஆதரவின்மை.  

தீர்வு:  

தொண்டு நிறுவனங்கள், தனிநபர் பங்களிப்புகளை அதிகரித்து நிதி திரட்டுதல்.  


7. முடிவுகள்


2024 சர்வதேச இணைந்த இரட்டையர் மாநாடு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் உலகளாவிய ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  


மன்னர் சல்மான் மையத்தின் பங்கும், அதன் சாதனைகளும் இணைந்த இரட்டையர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மாபெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. 


இம்மாநாட்டின் பரிந்துரைகள் சரியாக செயல்படுத்தப்பட்டால், உலகளாவிய அறிவியல், மனிதாபிமானம் மற்றும் சுகாதார துறைகளில் புதிய பாதையை அமைக்கும்.


கலாநிதி MHM அஸ்ஹர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »