திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் படுதோல்வியடைந்துள்ளது ரவூப் ஹக்கீமின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
கடந்த 2020ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 20,011 வாக்குகளை பெற்றிருந்தது. இந்நிலையில் 2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வெறும் 9,650 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெறும் 38 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்ட NPP, 2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 18,165 வாக்குகளை பெற்று தொகுதியை கைப்பற்றியுள்ளது.
20ம் திருத்தத்திற்கு கை உயர்த்தி ஜனாஸா எரிப்புக்கு துணை போனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ரவுப் ஹக்கீம். கல்முனைத் தொகுதிக்குறிய முன்னாள் எம்.பி ஹரீசுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதாக கூறி கடைசி நேரத்தில் ஏமாற்றியிருந்தார்.
இதுவரை காலமும் அஷ்ரபின் பெயரையும், ஆயிரம் விளக்கு பாட்டையும் போட்டால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தொடர்ந்து ஏமாற்றிய ரவுப் ஹக்கீமுக்கும் அவருடைய கட்சிக்கும் கல்முனை மக்கள் உச்சகட்ட பாடத்தை புகட்டியுள்ளனர்.