Our Feeds


Thursday, November 7, 2024

Zameera

போலி ஆவணங்களை தயாரிக்கும் கச்சேரி முற்றுகை – 2 பேர் கைது




 பொலன்னறுவை ஹிங்குரங்கொட பகுதியில் போலியான ஆவணங்களை தயாரிக்கும் போலி கச்சேரி ஒன்றினை சுற்றிவளைத்த பொலன்னறுவை வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.

 

போலியான ஆவணங்கள் சிலவற்றுடன் பொலன்னறுவை புதிய நகரில் நேற்று கைதான சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைவாக ஹிங்குரங்கொட பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது போலி கச்சேரி முற்றுகை இடப்பட்டுள்ளது.

 

 மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பிரதேச செயலாளர் அலுவலகம், அரச மிருக வைத்தியர் அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பரீட்சை திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, ஆகிய திணைக்களம் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரி சான்றிதழ், வாகனம் பதிவுசெய்யும் புத்தகம், பணம் ஏற்றுக்கொள்ளும் பற்றுச்சீட்டு புத்தகம் உள்ளிட்ட பெருந்தொகையான ஆவணங்களுடன் அவற்றினை தயாரிப்பதற்கு பயன்படுத்திய மடிக்கணினி ஒன்றையும் தரவுகளை களஞ்சியப்படுத்தி வைக்கும் நான்கு பென்ட்ரைவ் உள்ளிட்ட பொருட்களை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

போலி கச்சேரியை நடத்திச் சென்ற பிரதான சந்தேக நபர் 42 வயதுடைய ஹிங்குரங்கொட பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


அநுராதபுரம் நிருபர் 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »