நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.