செர்பியாவின் நோவி சாட் நிகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொன்கிரீட்டால் ஆன கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. குறித்த இடத்திலிருந்து ஆறு வயது சிறுமி உள்பட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடுதல் பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மை ஆண்டுகளில் இரண்டு முறை புதுப்பித்துக் கட்டப்பட்ட அந்த ரயில் நிலையத்தில், அரசின் ஊழல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. எனினும், கூரை புதுப்பிக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.