Our Feeds


Thursday, November 7, 2024

Zameera

இலங்கை விமானப்படை மூலம் திறைசேரிக்கு 130 மில்லியன் டொலர் வருவாய்


 

2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது.


மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நிலைகொண்டுள்ள விமானப்படையினரின் துணிச்சல், நிபுணத்துவம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பாராட்டியுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.


இலங்கையின் இராணுவப் படைகள் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையையும் இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்றும், இது உலக அரங்கில் தேசத்தின் நிலையை மேம்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய ஆபிரிக்க குடியரசில் (MINUSCA) ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படையின் விமானப் பிரிவின் மற்றுமொரு குழுவின் வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »