ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள்
இரண்டையும் பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.