NFGG - நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சார்பில் அம்பாறை, மன்னார், புத்தளம், கலுத்தரை மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று குறித்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் ரிஸ்வானுல் ஹக் மற்றும் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளராக தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் ஹிஷாம் மரிக்கார் ஆகியோர் NFGG சார்பில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதே வேலை கலுத்தரை, மன்னார் மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.