விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் சீதுவ அமந்தொலுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.