Our Feeds


Tuesday, October 15, 2024

Sri Lanka

ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக ரயில் சேவை பாதிப்பு!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான ரயிலின் இயந்திரம் இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கத்தின் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »