ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட (Sarath Ganegoda) தெரிவித்துள்ளார்.
அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ரிரிஜி ஏசியாவிற்கு (TTG Asia) வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.
இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 50% ஆனோர் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்திற்காக, விமான சேவையை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, இந்த விமான சேவையை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சரத் கனேகொட குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, October 16, 2024
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் முக்கிய தீர்மானம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »