ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட
அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பிலும் விரைவாக தேடிபார்க்கபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும் என்றும் எந்த விடயமும் மூடிமறைக்கப்பட மாட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.