எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் பின்னர் முடிவுகள் காலி தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.