இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இதன்போது புதிதாக தெரிவான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு தூதுவர் எஸ். ஜகார்யன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு வழங்கினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Tuesday, October 1, 2024
ஜனாதிபதிக்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »