ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற 'லெஜண்ட் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது, ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக உபுல் தரங்க, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவுக்கு முறைப்பாடளித்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று மாத்தளை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும், குறித்த வழக்கு விசாரணை இடம்பெறும் நிலையில் அவர் நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தாமல் அமெரிக்க தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
இந்தநிலையில், நாடு திரும்பும் போது அவரை கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tuesday, October 8, 2024
உபுல் தரங்கவுக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »