Our Feeds


Sunday, October 13, 2024

Sri Lanka

மு.க வின் தேசிய பட்டியல் மூலம் ஹரீஸ் பாராளுமன்றம் வருவார் - கண்டியில் ஹக்கீம்



அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் வேண்டுகோளுகிணங்கவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் பெயர் நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று கண்டியில் தெரிவித்தார்


அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் உள்வாங்கப்படவில்லை என்பதற்காக தேவையற்ற விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது உண்மையில் கவலைக்குரியது


என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்த நிலையிலும் ஏனைய வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்பு செய்யாத காரணத்தினாலும் இறுதி நேரத்தில் சகோதரர் ஹரிஸ் அவர்களின் பெயர்  வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படுவதில் தடங்கள் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது.


அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர்  பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.  


அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்திருக்கிறோம் என்பதை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.


கட்சியின் வெற்றிக்காக அம்பாறை மாவட்டத்திலும் அதற்கப்பாலும் உறுதிப்படுத்துவதற்கு கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற சகோதரர் ஹரிஸ் அவர்கள் எங்களுடன் முழுமையாக ஒத்துழைக்கின்ற போது நான் ஏற்கனவே குறிப்பிட்ட அவருக்கான தேசிய பட்டியல் விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்ன அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »