நாரஹேன்பிட்டி - கொழும்பு மாவட்ட செயலகத்தை அண்மித்த பகுதியில் நாளை (11) விசேடப் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு நாளைய தினமே, இறுதி தினம் என்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளைக் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இவ்வாறு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பிலிருந்து கிருலப்பனை நோக்கிப் பயணிக்கும் இடது பாதை, பேஸ்லைன் வீதி - நாரஹேன்பிட்டி சந்தியிலிருந்து பார்க் வீதி சந்தி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரை பொரளை நோக்கிப் பயணிக்கும் குறித்த வீதி இருபுறமும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் விசேடப் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, October 10, 2024
நாரஹேன்பிட்டியை சுற்றி நாளை விசேடப் போக்குவரத்து நடைமுறை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »