Our Feeds


Tuesday, October 29, 2024

Zameera

தபால் மூல வாக்கெடுப்பு நாளை ஆரம்பம்


 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை(30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல் அதிகாரிகளின் முன்னிலையில் வாக்களிக்க முடியும்.

இந்த 3 தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »