Our Feeds


Wednesday, October 16, 2024

SHAHNI RAMEES

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

 

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்கத்தின் சந்துன் ரத்நாயக்க தெரிவித்தார்.

“இந்த நாட்களில் நீங்கள் சாப்பிடும் உணவு சுத்தமாகவும், புதியதாகவும் இருக்க வேண்டும். உணவு சூடாக தயாரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, தண்ணீரை சுட வைத்துப் பாவனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள் என்றால் அவற்றின் தரம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இந்த நாட்களில், உங்கள் தோலில் காயம் அல்லது கீறல் இருந்தால், நீங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தால் எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்புக்கள் அதிகம்.. அதனால் உடனடியாக அதற்கு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்..”

இதேவேளை, கடும் மழை காரணமாக 40,758 குடும்பங்களைச் சேர்ந்த 159,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் 80 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »