நாடளாவிய ரீதியில் அதிகளவான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல் முறை என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக இவ்வருட தேர்தல் மிகவும் முக்கியமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும், இந்த வருடம் 50க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.