பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்று (11) பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிந்துள்ளது.
வேட்புமனுக்களுக்கான எதிர்ப்பு பிரேரணைகள் முன்வைக்கும் நேரம் முடிந்ததும், தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இன்று பிரகடனம் செய்யவுள்ளதாகவும் சின்னங்கள் தொடர்பான அறிவிப்பும் இன்று இடம்பெறும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 22 தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், தெரிவத்தாட்சி அலுவலகங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.