தென்கொரிய தூதுவர் மியோன் லீ, இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தென் கொரியா தூதுவர், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்புவதில் ஆறாவது இடத்தில் உள்ளதாகவும், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி அந்த பணம் அனுப்பும் தொகையை அதிகரிக்கச் செயல்படுவதாகவும் மியோன் லீ தெரிவித்தார்.
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென் கொரியாவின் அர்ப்பணிப்பு மியோன் லீயால் உறுதிப்படுத்தப்பட்டது
மேலும், ஜனாதிபதி அநுரகுமார கொரிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடாக இலங்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.