எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் பொதுத் தேர்தலில் தமக்கு வாக்களிப்பதைத் தவிர்க்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதன் அடிப்படையில் தான் வேட்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக கருணாரத்ன பரணவிதான அறிவித்துள்ளார்.