நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச நிதியைப் பெற்று முன்னெடுக்கப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகச் செயற்படுவது அவசியமானது எனவும் அரச நிறுவனங்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.