எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.
பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
Monday, October 7, 2024
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை - தேர்தல் ஆணைக்குழு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »