யானைகளை விரட்டுவதற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இரண்டாம் தர பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நமினிகம, பேர கனத்த பிரதேசத்தில் வசிக்கும் ஏழு வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தினமும் மாலை 6 மணிக்கு வேலிக்கு மின்சாரம் வழங்குவதாகவும் மறுநாள் காலை 6 மணிக்கு அதனை அணைத்து விடுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, மின்சாரத்தை அணைக்க மறந்துவிட்டதால், மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.