ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இவர், ஒரு வருட காலத்திற்கு சேவையாற்றுவார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.