''எனக்குத் தெரியாமல் நான் வகித்த கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டார் சஜித். ஆதலால் ,தேர்தல் வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடமாட்டேன். சஜித் தொடர்பில் விசனமடைந்துள்ளேன். எனக்கு வாக்களிக்க வேண்டாம்.'' -
இவ்வாறு அறிவித்துள்ளார் முன்னாள் எம்.பி அஜித் மான்னப்பெரும.
அவர் மேலும் கூறியதாவது
நான் இந்த தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவில் கையொப்பமிட்டேன்.
கம்பஹா மாவட்டத்தில் 20 வருடமாக அரசியல் அமைப்பாளராக பதவி வகித்துள்ளேன்.
இம்முறை தேர்தலில் போட்டியிட கையொப்பமிட்டாலும் போட்டியிலிருந்து விலகி நிற்க நான் தீர்மானித்துள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் நான் இல்லாத காரணத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
சஜித் பிரேமதாச தொடர்பில் நான் கடும் விரக்தியடைந்துள்ளேன்.
வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணிநேரத்துக்குள் வேறு ஒருவரை கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்க சஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் ரணிலுக்காகவும் வேலை செய்த ஒருவரை அவ்வாறு நியமித்துள்ளார்.
இதனால் நான் மிகவும் விரக்தியடைந்துள்ளேன்.