நிலவி வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்தார்.
நேற்று (11) இரவு 9 மணி நிலவரப்படி, நீர்மானியின் நீர்மட்டம் 5.54 மீற்றராக காணப்படுவதாகவும், இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பிரதிப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்