எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் மற்றும் எந்தச் சின்னத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் எனக் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அதற்கான இறுதி முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் அறிவித்துள்ளது.