அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடும் தற்போதைய ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் - நியூவெலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மீனவர்களுக்குச் சலுகைகளை வழங்கினார். விவசாயிகளுக்குச் சலுகைகளை வழங்கினார். எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை.
சம்பள நிர்ணய சபையில் 1,350 ரூபாய் அடிப்படை சம்பளமும் 380 ரூபாய் ஊக்குவிப்புத் தொகையும் முன்வைக்கும் போது அதனை ஜே.வி.பி கட்சியே நிராகரித்தது.
இதேவேளை தமிழ் பிரதிநிதித்துவதற்கு பெரும் பாதிப்பு வந்துள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
Wednesday, October 16, 2024
தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு பெரும் பாதிப்பு - ஜீவன்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »