Our Feeds


Sunday, October 6, 2024

SHAHNI RAMEES

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

 

ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியிருந்தனர்.



தேசிய ஜனநாயக முன்னணியின் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சமாஜ்வாதி கட்சியின் மஹிந்த தேவகே, சுயேச்சை வேட்பாளர் பிரேமசிறிமானகே மற்றும் கே ஆனந்த குலரத்ன ஆகியோர் தமது செலவு அறிக்கைகளை வழங்கிய நான்கு வேட்பாளர்களில் அடங்குவர்.



தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, அவற்றைச் சமர்ப்பிக்க வரும் 13ஆம் திகதி கடைசி நாள் என்றும், அதன்பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளுக்கு சட்டவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »