இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி,கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதிக்கு கையளித்தார்.
புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை வெற்றிமிக்க மற்றும் சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும் எனத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி உதைக்வே ஆண்டகை, அதற்காக தாம் மனமார வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்காலம் குறித்து தனது சாதகமான கருத்தை வெளிப்படுத்திய உதைக்வே ஆண்டகை, மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஏற்கனவே சிறப்பான அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அது தொடர்பான ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அந்த முயற்சிகள் அனைத்திற்கும் வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
Wednesday, October 9, 2024
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் வத்திக்கான் பிரதிநிதி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »