அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்திருந்தார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே லால் காந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த லால் காந்த, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தால் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார் என குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டில் ஓய்வெடுப்பதற்குப் பதிலாக இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது நகைப்புக்குரியது எனவும் லால் காந்தா மேலும் தெரிவித்துள்ளார்.