ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்கும் போது அவருக்கு வயது 76.
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அமைச்சருக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கிக் கொண்டிருந்த ஒருவர், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்றதாகவும், அவர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.