பொதுத் தேர்தலுக்கான தினத்தைக் குறிப்பிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாகவே வெளியிடப்பட்டது. இதுவரையில், தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு தொடர்பில் எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அதற்கப்பால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார்களென்றால் அதற்கு உரிமை இருக்கிறது.
நீதிமன்றத் தீர்மானத்தை நாங்கள் அவ்வாறே ஏற்றுக்கொள்வோமென்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
‘‘பொதுத்தேர்தல் தொடர்பில் நாட்டில் நடைமுறையிலிருக்கும் சட்டதிட்டங்களுக் கமையவே தேர்தலுக்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவோ அல்லது வேறு தரப்போ இதுவரையில் தேர்தலுக்கான திகதி தவறு என்று கூறவில்லை.
அவ்வாறிருக்கையில், வேறுத் தரப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் முடியும். அதனை தவறு என்று கூறமுடியாது. இதுதொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
தற்போதுவரையில் சட்ட ரீதியாகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது என்பதை என்னால் பொறுப்புடன் கூற முடியும் என்று குறிப்பிட்டார்.
Wednesday, October 23, 2024
தேர்தல் அறிவிப்பு சட்டரீதியானது - விஜித ஹேரத்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »