20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ஊழல் தொடர்பான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையில் வசிக்கும் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், காருக்கான எரிபொருளை செலுத்துவதற்கும், 25.10.2024 அன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்தவருக்கு எதிராக இருந்த வழக்குத் தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்கும் முறைப்பாட்டாளரிடம் குறித்த பரிசோதகர் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து ஆணைக்குழுவினால் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
அவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.