Our Feeds


Thursday, October 10, 2024

Sri Lanka

மறைந்த ரத்தன் டாடாவின் வாழ்நாள் சாதனைகள்!


பிரபல இந்தியத் தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம் வந்தார்.

அவரது சேவைப் பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர். மிகவும் சேவை மனப்பாங்கு கொண்டவர். இவரைப் பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள்.

இதன் காரணமாகவே மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தியுள்ளார்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு: 

நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937, டிசம்பர் 28இல் சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்குச் சேர்ந்தார்.

நாட்டின் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா, தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார்.

டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்துத் தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.

டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச் சென்றார்.

டாடா குழுமத்தில் பணியாற்றிய ரத்தன் டாடா பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார்.

சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளைக் கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா.

1991இல் டாடா குழுமத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின் நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது.

ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தைப் பெருக்கியது டாடா குழுமம்.

டாடா குழுமத்தின் தலைவராக 1991ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார்.

வாகனம், தகவல் தொழில்நுட்பம், இரும்பு, தொழில்துறை எனப் பலவற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார்.

நடுத்தர மக்களின் வாகனக் கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா.

தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.

நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்.

தன்னம்பிக்கை, உழைப்பு, அறிவு, தொழில் திறன், அறச் சிந்தனைக்காக அறியப்பட்டவர் ரத்தன் டாடா.

கொரோனா நிவாரண பணிகளுக்காக ரத்தன் டாடா இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »