நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரான அனுஷா சந்திரசேகரன் மற்றும் ஷான் பிரதீஷ் உள்ளிட்ட குழுவினர் (11.10.2024) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான அனுஷா சந்திரசேகரன் மற்றும் கட்சியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் மகன் ஷான் பிரதீஷ் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் இவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
எஸ்.கணேசன்