பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன்
தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 285 மில்லியன் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர்.சந்தேகநபர்களான 41 வயதான ஓமல்பகே தம்மிக்க சமன் குமார மற்றும் 53 வயதான கங்கணம் ஆராச்சிகே சுஜீவ ஆகியோர் பிரபல போதைப்பொருள் மற்றும் "ஹரக் கட்டா" மற்றும் "ஆர்மி சூட்டி" போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையவரகளென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) பிலியந்தலையில் கூட்டுச் சுற்றிவளைப்பை மேற்கொண்டதன் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது, சந்தேகநபர்களிடம் 7.415 கிலோ ஹெரோயின் மற்றும் 1.017 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகநபர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (PNB) மேற்கொண்டு வருகிறது.